திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 27-7-25 காலை 10:30 மணி அளவில் திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருது வழங்கும் விழா மற்றும் 12-30 மணியளவில் கிடா விருந்து வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது முன்னதாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலம் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து பாரம்பரிய விதை நெல் ரகங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தும் பாதுகாக்கும் வரும் மாநில இயற்கை வேளாண்மை பிரிவு தலைவர் ரெ.முத்துசாமி அவர்களுக்கு இயற்கை போராளி என்ற விருதினை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கினார் மாநில தலைமை பேச்சாளர் சந்திரசேகர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் இயற்கை வேளாண்மை விவசாயம் செய்து இந்த மண்ணிற்கும் அனைத்து உயிர்களுக்கும் நஞ்சில்லா உணவை படைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தனது ஏற்புரையில் இயற்கை போராளி முத்துச்சாமி வழங்கினார் இவ்விழாவில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து உணவருந்தி மகிழ்ந்தனர் விருது வழங்கும் விழாவினை விருது விழா கமிட்டி ஆலோசகர் A.நாகேந்திரன் மற்றும் செயலாளர் R.L.R.ரமேஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் நன்றி தெரிவித்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக