திருப்பூர் மாவட்டம்
உடுமலை-மறையூர் சாலையில் எஸ்.பெண்ட் அருகே சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது. இதில் பயணம் செய்த ஷாலினி(5) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றவர்கள் காயத்துடன் தப்பித்தனர். ஷாலினி மறையூர் நிகில்ஷா என்பவரின் மகள் ஆவார். மறையூரில் இருந்து உடுமலை அருகே உள்ள அமராவதி அணைப் பகுதிக்கு நேற்று மாலை சுற்றுலா வந்தவர்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
உடுமலையில் இருந்து சின்னார் வரையில் சேதம் அடைந்த சாலையே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக