ஆகஸ்ட் 1 ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோயில் கருடன் திரு நட்சத்திரம் இன்று கொண்டாடப்பட்டது.
மகாவிஷ்ணுவின் வாகனம் ஆகிய கருட பகவான் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் கருட ஜெயந்தி கொண்ட ஆடுவது வழக்கம்.
இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு திருமஞ்சனம். தொடர்ந்து சன்னதி கருடனுக்கும் திருமஞ்சனம் நடந்தது. 8 30 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் இருமாடவீதிகளிலும் மதில்கள் மேல் உள்ள கருட பகவானுக்கு காலை 10 மணிக்கு பால் பஞ்சாமிர்தம் அபிஷேகம் கும்பம் வைத்து திருமஞ்சனம் நடந்தது. 12 மணிக்கு புது வஸ்திரங்களை அணிவித்து மாலைகள் அலங்காரம் செய்து தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். நாராயணன். வாசு. ராமானுஜம். சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன் திருவேங்கடத்தான். சீனிவாசன். கண்ணன். தேவராஜன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக