பொங்கலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

பொங்கலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்


மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி, 

மக்களின் தேவைகளை இல்லம் தேடி பூர்த்தி செய்திடும் மாபெரும் முன்னெடுப்பான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சேவை  திருப்பூர் பொங்கலூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் கலந்து கொண்ட இம்முகாமில், மகளிர் உரிமைத் தொகை பட்டா சிட்டா வீட்டு வரி, இலவச மருத்துவம் மற்றும் முதியோர் உதவித்தொகை,  பெயர் மாற்றுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டிய மனுக்களை தீர்வு காணப்பட்டது மேலும் அவகாசம் தேவைப்படும் மனுக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது நிகழ்வில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிய க. செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மருத்துவ பெட்டகம் வழங்கினார் 

இந்நிகழ்வில், துணை செயலாளர் வக்கீல் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், முருகேஷ்,

ஒன்றிய கழக செயலாளர்கள் அசோகன், ஜேசிபி பாலுச்சாமி, பூமலூர் சீனிவாசன், பி.கே.கனகராஜ், சிவாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் லோகு பிரசாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம் கிளைச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad