மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் மாணவர்கள் திறன் மேம்பாடு குறித்த தலைப்பில் நடைபெற்றது.
மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தீபா தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் அம்சவேனி, ஆசிரியர்கள் சீனிவாசன், லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்கள் கல்வியோடு இதர திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். பல்கலை கழகங்கள் அங்கீகரித்த பட்டங்கள் படிக்க வேண்டும், வா மேலும், கல்வி கற்கும் காலகட்டங்களில் இதர திறன்களான கூடுதல் மலித் திறன் மற்றும் கணினி உள்ளிட்ட இதர திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். என்றார்.
ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது மாணவப் பருவத்தில் தங்களுடைய திறன் வளர்ப்பில் அதாவது முடிவெடுக்கும் திறன்கள் மற்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன்கள் போன்றவற்றை வாழ்ந்து கொள்ளுதல் அவசியம் குழுக்களாக கலந்தலோசித்து முடிவுகள் எடுப்பதை குறித்து புரிந்து கொண்டு சமயோசிதமாக கையாளுவதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக