மணப்பாடு மறை வட்ட முதன்மை குரு பென்சிகர் அடிகளார் தலைமையில் நடந்தது.
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் வெள்ளியான இன்று மணப்பாடு மறைவட்ட முதன்மை குருவும், கல்லாமொழி பங்கு தந்தையுமான பென்சிகர் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் நாம் அமைதி காத்திருந்தால் எல்லாமே நமக்கு சரியாகும், அமைதியாக இருங்கள் வாழ்க்கை படிப்படியாக உயரும் உள்ளிட்ட சிறப்பு நற்ச்செய்தியை வழங்கினார். மேலும் இந்தத் திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்க நன்கொடையாக வழங்கிய ஆலந்தலையை சேர்ந்த, சென்னையில் தற்போது வசித்துவரும் ரபின் பமிலா குடும்பத்தினருக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
இதில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் திரளாக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்ருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை டைட்டஸ் மற்றும் ஊர் நல கமிட்டி திருத்தல நிதி குழுவினர் சிறப்பாக செய்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக