பெண்கள் உரிமைகள் அணி ஒன்று கூடி கலந்தாய்வு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

பெண்கள் உரிமைகள் அணி ஒன்று கூடி கலந்தாய்வு கூட்டம்


நீலகிரி மாவட்டம் நடுவட்டம் அனுமாபுரத்தில் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி மற்றும் ஆல் இந்தியா விவசாய சங்கம் மற்றும் பெண்கள் உரிமைகள் அணி ஒன்று கூடி கலந்தாய்வு கூட்டமானது நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு  யூ எஸ் ஐ பி மாநில தலைவர் திரு தன்ராஜ் ஐயா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்தார் இந்த கூட்டத்தில் யூ எஸ் ஐ பி நிர்வாகிகள் வார்டு தலைவர் ஏசு செயலாளர் சாம் பரமசிவம் மற்றும் தலைவர் வெங்கடேசன் மற்றும் கூடலூர் பகுதி பந்தலூர் சேரம்படி வார்டு தலைவர் சீமான் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் யூ எஸ் ஐ பி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர் அந்த கலந்தாய்வு கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைகளை மாநில தலைவர் கேட்டறிந்தார் மேலும் யு எஸ் ஐ பி மனித உரிமை அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் மிக சிறப்பாக எடுத்துக் கூறினார் இதனைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர் அகோரிகளை ஏற்றுக்கொண்ட யுஎஸ்ஐபி மனித உரிமைகள் அணி மாநில தலைவர் தன்ராஜ் இந்த கோரிக்கைகள் எல்லாம் மிக சிறப்பாக நிறைவேற்றித் தரப்படும் வாக்குறுதி அளித்தார் அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது மக்கள் குறைகளை தீர்க்க நாம் அனைவரும் ஒன்று கூடி உழைக்க வேண்டும் என்றார் இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்திற்கு வருகை தந்த அந்த அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டு கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad