திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் - 40வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் - 40வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் - 40வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய அளவில், கண் மருத்துவமனைகளும், அதனை சார்ந்த கண் வங்கிகளும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடித்து வருகிறது 

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்பாக மாணவ மாணவியர்கள் மற்றும் 500 பேருக்கு மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்துகொண்டு மாபெரும் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.  

தலைமை விருந்தினராக திரு N. சிலம்பரசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்டம் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை ஏந்தி, மனித சங்கிலியை தொடங்கி வைத்து பேசினார்

சிறப்புவிருந்திர்களாக இந்திய மருத்துவ சங்கதிருநெல்வேலி கிளை நிர்வாகிகள் தலைவர் டாக்டர் M.முகம்மது அபூபக்கர் , செயலாளர் டாக்டர் M. பிரபுராஜ்,பொருளாளர் டாக்டர் K. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் D.லயனல்ராஜ் அவர்கள் கண் தானம் செய்வதின் அவசியத்தை குறித்தும் உலக அளவில் கருவிழி பார்வை இழப்பு தடுப்பதை குறித்தும் விரிவாக பேசினார். 

நமது மருத்துவமனையில் உலக தரத்தில் தையல் இல்லா கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களுடன் உதவியுடன் செய்யப்படுகிறது என்பதையும் மேற்கோள் காட்டினார்.மேலும் PKசரவணன் தலைவர் உறுப்புகள்தானபிரிவு ரோட்டரிகிளப் திருநெல்வேலி கலந்து கொண்டார்

மனித சங்கிலியில் , திருநெல்வேலி டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி பாளையங்கோட்டை, அன்னை காஜிரா பெண்கள் கல்லூரி மேலப்பாளையம், ஸ்ரீ சாரதா பெண்கள் கல்லூரி திருநெல்வேலி ,நேரு நர்சிங் கல்லூரி வள்ளியூர், திருநெல்வேலி இதய ஜோதி நர்சிங் கல்லூரி , வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, சிவகாசி மாணவ மாணவியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் மனித சங்கிலியில் பங்கேற்றனர். 
 
இதனையொட்டி இந்த இரண்டு வாரங்களில் (ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை ) பள்ளிமற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்தானம் குறித்த ஓவியம் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருவிழிப்பிரிவு மருத்துவர் டாக்டர்.ராணிலட்சுமி, கண்வங்கி ஒருங்கிணைப்பாளர் திரு.ஆனந்த் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் ,ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad