உதகையில் பெரிய வாடகை வாகனங்களுக்கு அனுமதி பெற மனு:
நீலகிரி தொட்டபெட்டசிகரம் வரை செல்ல மேக்சிகேப் வாகனங்களுக்கு அனுமதி வழங்க கோரி ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு
தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு என விரக்தி
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் போது மேக்சிகேப் மற்றும் பிற சுற்றுலா வாகனங்கள் தொட்டபெட்டா சிகரம் வரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வாகனங்கள் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியிலேயே நிறுத்த படுகின்றன
இதனால் உள்ளூர் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் இதனால் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனர்
தொட்டபெட்டா சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க வருகின்றனர் ஆனால் சமீபத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தொட்டபெட்டா சிகரம் வரை வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படாமல் இருப்பது டிரைவர்களின் வருமானத்தை குறைத்ததோடு, பலரின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது
இது குறித்து ஓட்டுநர்கள் தெரிவித்ததாவது சுற்றுலா சீசன் காலத்தில் அதிகமான பயணிகள் வருவதால் வாகன சேவைக்கு அதிக தேவை உள்ளது ஆனால் இப்படி அனுமதி மறுக்கப்பட்டதால் வருமானம் குறைந்து குடும்ப செலவுகளை நடத்த சிரமமாக உள்ளது எனவே மேக்சிகேப் வாகனங்கள் தொட்டபெட்டா சிகரம் வரை செல்ல உடனடி நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக