வேலூரில் வானவில் மன்றத்தின் சார் பில் அறிவியல் கணிதத் திருவிழா-வில் முழு சந்திர கிரகண விழிப்புணர்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 ஆகஸ்ட், 2025

வேலூரில் வானவில் மன்றத்தின் சார் பில் அறிவியல் கணிதத் திருவிழா-வில் முழு சந்திர கிரகண விழிப்புணர்வு!

 வேலூரில் வானவில் மன்றத்தின் சார்பில் அறிவியல் கணிதத் திருவிழா-வில் முழு சந்திர கிரகண விழிப்புணர்வு!
வேலூர் , ஆகஸ்ட் ‌30 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின்  சார்பில் வானவில் மன்றம் செயல்  பாடுகள்
குறித்த மாதாந்திர மீளாய்வு கூட்டம் மற் றும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நிகழ்வு குறித்த விழிப்
புணர்வு  கருத்தரங்கம் நடை பெற்றது இந்த நிகழ்விற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கே.எம்.ஜோதிசுவர பிள் ளை தலைமை தாங்கி இந்திய வானியற் பியல் நிறுவனமும் தமிழ்நாடு வானியி யல் அறிவியல் சங்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஏய்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள முழு சந்திர கிரகண விளக்கமான விவர துண்டறிக்கையினை கருத்தாளர்களுக்கு வழங்கி பேசினார்.
 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன் முன்னிலை வகித்து பேசினார்.தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகி யோர் முழு சந்திர கிரகணம் குறித்து கருத்துரையாற்றினர். அப்போது அவர் கள் கூறியதாவது சூரியனுக்கும் சந்திர னுக்கும் இடையில் பூமி வரும் பொழுது சந்திர கிரகணம் ஏற்படுகிறது இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது இது ஒரு இயற்கையான நிகழ்வு இதை நாம் அனைவரும் பாதுகாப்பாக எந்த தீங்கும் இல்லாமல் வெற்று கண்ணால் பார்க்க முடியும்.இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி இரவு 85 நிமிடங்கள் முழுமையாக சந்திரன் மறைக்கப்படும் இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படும். 
 முழு கிரகணத்தின் போது சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும்.சந்திர கிரக ணமானது செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 8.58 மணிக்கு துவங்கும் பின்னர் இரவு 9:57 மணிக்கு முழுமையாக மறையும் அப்பொழுது சந்திரன் இருண்ட அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இதனை மிக எளிமையாக பார்க்க முடியும்.இரவு 11.01 மணி முதல் அதிகாலை 12.33 மணி வரை சந்திரன் முழுமையாக மறையும் அதிகாலை 01.26 மணி அளவில் முழுவது மாக விட்டு வெளியேற தொடங்கும்  அதி காலை 2:25 மணிக்கு புற நிழல் பகுதியை விட்டும் வெளியேறும் இந்த சந்திர கிரக ணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க் கலாம். அல்லது தொலைநோக்கி மூல மாகவோ பைனாகுலர் மூலமாகவோ பார்க்கலாம்.  மீண்டும் இது போன்ற ஒரு சந்திர கிரகணம் 2028 ஆம் ஆண்டு டிசம் பர் 31ஆம்தேதி தான் வருகிறது என தெரி வித்தனர்வேலூர் மாவட்டத்தில் உள்ள வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad