கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் புவனகிரி தாலுக்கா விடியல் சமூக அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் 30/08/2025 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இருதய சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவம், பொது மருத்துவம், புற்று நோய்க்கான மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், குடல் மற்றும் இரைப்பை மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றிற்கான பரிசோதனை நடத்தப்பட்டது.
புவனகிரி தாலுக்காவிடியல் தலைவர்புஷ்ப. சவுரிராஜன், விடியல் துவக்கவுரை எறும்பூர் பாலமுருகன், விடியல் ஆசிரியர்கள் இமானுவேல், ஆதிரை சங்கீதா மாதேஸ்வரி ஆகியோர் பங்களிப்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் முகாம் இயக்குனர் மருதூர் சக்திவேல் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக