24 கோடியே 54 இலட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் கடலூர் அருகே அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
கடலூர் ஆக 30 24 கோடியே 54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் அருகே தானூர் பகுதியில் 110 / 22கிலோவாட்திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுபாளையம் தானூர் கிராமப் பகுதியில் 24 கோடியே.54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110 / 22 கிலோ வாட் திறன் கொண்ட புதிய துணை மின்நிலையம் ஒன்றிக்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது :
பொதுமக்களின் வளர்ச்சிக்காகவும் ஏராளமான திட்டங்களையும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும்அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக் கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் எண்ணற்ற உட்கட்டமைப்பு வசதிகளையும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்செயல்படுத்திவருகிறார்
தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சர்
மு கருணாநிதி முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் மின்சாரமில்லா கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அவ்வாறே தற்போது அனைத்து கிராமப் பகுதி களும் மின்சார வசதிகள் உள்ளன.
தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சர்
மு கருணாநிதி முயற்சியால்
ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு
கிராமப்புறங்களில் அனைத்து இடங்களிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் பொதுமக்களின் தேவையை அறிந்துதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களான சாலைப் பணிகள், குடிநீர் வசதி மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவை களுக்கு முக்கியத்துவம் அளித்து நகர்புற பகுதிகளுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
அதன்படி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தானூர் பகுதி யில் 24 கோடியே.54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110 / 22 கிலோ வாட் திறன் கொண்ட புதிய துணை மின்நிலையம் அமைப்பதற்கு
அடிக்கல் நாட்டப்பட்டது
இதனுடன் தானூர் பகுதியில் 7.13 கிலோ மீட்டர் நீளத்தில் மின்பாதை யும், ஆலப்பாக்கம் கிராமத்தில் 7.66 கிலோ மீட்டர் நீளத்தில் மின்பாதையும், காயல்பட்டு கிராமத் தில் 4.12 கிலோ மீட்டர் நீளத்தில் மின் பாதையும், திருச்சோபுரம்
கிராமத்தில் 7.5 கிலோ மீட்டர் நீளத்தில் மின்பாதையும் என 4 புதிய மின்னூட்டிகளும் அமைக்கப்படவுமுள்ளது.
இத்துணைமின்நிலையம் மூலம் ஆலப்பாக்கம், கருவேப்பம்பாடி, தானூர், காயல்பட்டு, தீர்த்தனகிரி, திருச்சோபுரம், மேட்டுப்பாளையம், பூவாணிக்குப்பம்,பள்ளி நீரோடை ஆண்டார்முள்ளிப் பள்ளம், உள்ளிட்ட 29 சுற்று வட்டார கிராம பகுதிகளிலுள்ள சுமார் 12 ஆயிரத்து 285 மின்நுகர்வோர்கள் பயன்பெறுவர்.
மேலும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும்
அனைத்து திட்டப் பணிகளையும் பொதுமக்களின் அடிப்படை தேவை களை கருத்தில்கொண்டும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தகுதியுள்ள பயனாளிகள் எவரும் விடுபடாமல்
தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கொண்டு சேர்த்திட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது."
இவ்வாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்..
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ர.அ.பிரியங்கா விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் சதாசிவம், மின் தொடரமைப்புத்திட்ட தலைமை பொறியாளர் வேல்முருகன், கடலூர் மேற்பார்வை பொறியாளர் இர.ஜெயந்தி, செயற் பொறியாளர்
கள் வள்ளி, திலகர் ,அன்புச்செல்வி
உதவி செயற் பொறியாளர்கள் அருளானந்தன்,வேல்முருகன், அருள்ஜோதி, மற்றும் உதவி மின் பொறியாளர்களும் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திபிரிவு
செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக