(A T C) பஸ் நிலையத்தின் அவல காட்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

(A T C) பஸ் நிலையத்தின் அவல காட்சி

 


(A T C) பஸ் நிலையத்தின் அவல காட்சி !!! நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வருகை தரும் பிரதான சாலையின் அருகில் மக்கள்   பயன்படுத்த புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் சிறுநீர் கழிக்கும் இடமாகவும். குப்பை தொட்டியாக மாற்றப்பட்டிருக்கிறது இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொது மக்கள் மற்றும்  பள்ளி மாணவ மாணவிகள் நடப்பதற்கு மிக சிரமமாக உள்ளது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உதகை நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்குமாறு  பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad