கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விரிசடி காலணியில், தலித் சமூக மக்கள் வசிக்கும் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட பந்தல்களை, சாதி வெறி கொண்ட சிலரின் கோரிக்கையின் பேரில் அஞ்சுகிராமம் காவல் நிலைய அதிகாரிகள் அகற்றியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தெரிய வந்ததும், அப்பகுதி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் மண்டல துணை செயலாளர் திருமாவேந்தனை தொடர்பு கொண்டனர். அவர்கள் நேரில் சென்றபோது, பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பந்தல் மற்றும் அலங்காரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தனர்.
இதை எதிர்த்து, மாவட்ட நிர்வாகம் தலித் சமூகத்துக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அகற்றப்பட்ட பந்தல் மற்றும் அலங்கார வளைவுகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியபோதும், காவல்துறை மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, தலித் சமூக மக்களை திரட்டி தென் மண்டல துணை செயலாளர் திருமாவேதன் தலைமையில் போராட்டம் நடத்தும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்க உள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக