பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் மன்னத்திவயல் பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் மன்னத்திவயல் பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

 


பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் மன்னத்திவயல் பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பூச்சி மாத்திரை வழங்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளி மற்றும் மண்ணாத்திவயல் அரசு உயர்நிலை பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணா தாஸ் (சேரம்பாடி), ஷோபனா (மண்ணாத்திவயல்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். 


நிகழ்ச்சியில் சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஶ்ரீனிதி, செல்வகுமார், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் நிஷார், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் போதை பொருள் தடுப்பு, பாதிப்புகள், தடுக்கும் நடைமுறைகள், குடற்புழு நீக்கம் - பூச்சி மாத்திரை அவசியம் பயன்படுத்தும்  முறைகள், ஊட்டச்சத்து கிடைக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர். 


தொடர்ந்து போதை பொருள் தடுப்பு மற்றும் குடற்புழு நீக்க -பூச்சி மாத்திரை குறித்த உறுதிமொழி எடுத்து கொள்ள பட்டது.


பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad