தூத்துக்குடி - ஏரல் பேருந்து நிலையம் உள்ளே மணல் குவியலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி - ஏரல் பேருந்து நிலையம் உள்ளே மணல் குவியலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையம் உள்ளே மணல் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மூன்றாவது பெரிய வணிக நகரமாக உள்ளது இந்த நிலையில் ஏரல் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 54 கிராமங்களை சார்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி பயிலுவதற்கும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஏரல் வந்து தான் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது 

இந்த நிலையில் ஏரல் பேருந்து நிலையம் உட்புறமாக உள்ள மணல்குவியல்களை அகற்றாமல் இருப்பதால் கண்களில் தூசி படுகிறது மேலும் அருகில் உள்ள வணிக நிறுவனங்கள் உணவகங்களுக்கு மண் தூசிகள் பரவி பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது 

என்வே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையீடு செய்து ஏரல் பேருந்து நிலையம் உள்ளே மணல் குவியலை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad