திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100-வது படமாக 1991 ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீன 4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டலாக மாற்றப்பட்டு, இன்று ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரி-ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பில் கார்த்திக் வெங்கடேசன் ரி-ரிலீஸ் செய்த இந்த படத்தை, தாராபுரத்தில் தேமுதிக தெற்கு மாவட்டம் சார்பில் எஸ்.வி.ஆர். விஷுவல் சத்தி திரையரங்கில் திரையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது, திரையரங்கம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள், மகளிர் என ஏராளமானோர் திரண்டு, கேப்டன் பிரபாகரன் படத்தை ரசித்தனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், “தமிழகம் முழுவதும் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம், தாராபுரத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலேயே அதிக வசூல் சாதனை படைக்க உள்ளது. விஜயகாந்த் ரசிகர்கள் இன்னும் அப்படியே உள்ளனர், அவர் எங்களது மனதிலும் நெஞ்சிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை தாராபுரம் நகர கழக செயலாளர் ரா.ச. ரஞ்சித்குமார், ஒன்றிய கழக செயலாளர் மோ. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, துணை செயலாளர் கந்தசாமி, குண்டடம் பேரூர் கழக செயலாளர் பிரகாஷ், கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் முருகன், சின்னக்கம்பாளையம் பேரூர் கழக செயலாளர் சௌந்தர்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா, செயற்குழு உறுப்பினர் கிரி, பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், பெரியசாமி, கேப்டன் டிவி முனியப்பன், நகரத் தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக