வாணியம்பாடியில் விபத்தில் துண்டான இளைஞரின் கையை இணைத்து வாணி யம்பாடியில் மருத்துவர்கள் சாதனை!
வாணியம்பாடி, ஆக.22 -
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல் அறுவை தொழிற் சாலையில் கடந்த 15 ஆம் தேதி கல் அரவை இயந்திரத்தில் சிக்கிய மேற்கு வங்காள மாநிலம் சுல்தான்பூர் கிராமத் தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 20) என்ற இளைஞரின் இடது கை தோள்பட்டை கீழ் முதல் முழுமையாக கை துண்டாகிப் பிரிந்தது. கடும் இரத்தப் போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வரை அருகிலிருந்த மக்கள் உடனடியாக வாணியம்பாடி தனியார் மருத்துவனை க்கு (டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி) கொ ண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர் டேவிட்விமல் குமார், அவசர பிரிவில் அனுமதித்து திட்டம் மற்றும் வழிகாட்டுதலின்படி அனைத்து வித பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
பின்னர் 2 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கி ற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு எலும்பு முறிவு பகுதி நேர தலைமை மருத்துவர் டேவிட் விமல் குமார், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் மருத்து வர் ஸ்ரீதர் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் கே.எம்.பாலாஜி ஆகியோர் இணைந்து மொத்தம் 7 மணி நேரம்நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு துண்டாகிய கையின் எலும்புகள் மீண்டும் இணைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன. மேலும் நரம்புகள் மற்றும் தசைகள் மீண்டும் ஒருங்கிணை த்தும், இரத்த நாளங்கள் மைக்ரோ சர்ஜரி முறையில் நுண்ணோக்கி வழியாக மிகு ந்த கவனத்துடன் இணைக்கப்பட்டன தோல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு கை க்கு இயல்பு தோற்றம் மற்றும் செயல்பாடு கிடைக்குமாறு வெற்றிக்கரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை, பெங்க ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதியில் செயல் படும் மிகப்பெரிய தனியார் மருத்துவம னையில் மட்டும் மேற்கொள்ளப்படும் இத்தகைய சிக்கலான, மிகுந்த சவலான அறுவை சிகிச்சை வாணியம்பாடியில் நடைபெற்று முதல் முறையாகும். நோயா ளியின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித் தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக