வேலூர் காந்திநகர் மாவட்ட கிளை நூல கத்தில் நூலகத்தின் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் பிறந்த நாள் தேசிய நூலகர் தினம் கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

வேலூர் காந்திநகர் மாவட்ட கிளை நூல கத்தில் நூலகத்தின் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் பிறந்த நாள் தேசிய நூலகர் தினம் கொண்டாட்டம்!

வேலூர் காந்திநகர் மாவட்ட கிளை நூல கத்தில் நூலகத்தின்  தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் பிறந்த நாள் தேசிய நூலகர் தினம் கொண்டாட்டம்!
 
காட்பாடி , ஆகஸ்ட் 12 -

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மாவட்ட முழுநேர கிளை நூலகத்தில் நூலகத்தின் தந்தை என கருதப்படும் டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாள் தேசிய நூலகர் தினம்கொண்டாடப்பட்டது
இன்றை நிகழ்விற்கு வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி எஸ்.ஆர்.ரெங்கநாதன் திருஉருவ படத்திற்கு வாசகர் வட்டத்தின்  தலைவர் வி பழனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நூலக வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் தியாகசந்தன், அசோகன், நீலகண்டன் மற்றும் நூலகத்துக்கு வருகை தந்த வாசகர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.
இந்திய நூலகர் மற்றும்கணிதவியலாளர் எஸ்.ஆர்.ரெங்கநாதன்அவர்களின்பிறந்த நாள் தேசிய நூலகர் தினமாக கொண்டா டப்படுகிறது. இவர்தமிழ்நாட்டில்மயிலாடு துரைமாவட்டத்தில்பிறந்தவர்நம்இந்தியா வில் இவரது பிறந்த நாளை தேசிய நூல கர் தினமாக கொண்டாடப்பட்டு வருகி றது.  இவர் 1949 முதல் 1955 வரை இந்திய நூலக சங்கத்திற்கு தலைமை தாங்கி னார்.   இந்தியா முழுவதும் ஒரு மேம்பட்ட நூலக அமைப்பை உருவ்க்குவதற்கான 30 ஆண்டு திட்டத்தை வரைந்தார். 
இந்த நிகழ்ச்சிக்கு நூலகத்தின் நூலகர் தீ. மஞ்சுளா வரவேற்றார் நூலகர் சத்தியவாணி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad