இராமேஸ்வரம் அருகே கழிப்பிட வசதிகள் இல்லாமல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் அவதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

இராமேஸ்வரம் அருகே கழிப்பிட வசதிகள் இல்லாமல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் அவதி.

இராமேஸ்வரம் அருகே கழிப்பிட வசதிகள் இல்லாமல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் அவதி. 

டெண்டர் விடப்பட்டு ஓராண்டு ஆகியும் ஒப்பந்தகாரர் காலதாமதம் செய்வதாக புகார்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வட்டம் பாம்பன் தரவைத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறைகள் உடைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் கழிப்பிடம் கட்டாமல் உள்ளது இங்கு பயின்று வரும் சுமார் 92 மாணவ மாணவியர்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக அவர்கள் பெரிதும் அவதிஅடைகின்னர்.

இதற்கான ஒப்பந்தம் தங்கசிமடத்தை சேர்ந்த பரிதி என்பவர் டெண்டர் எடுத்து ஓராண்டு காலம் கடந்தும் பணிகள் தொடங்காமல் உள்ளது.இதற்கான காரணத்தை கேட்டபோது கமிஷன் காரணமாக இந்த கழிப்பிடம் மற்றும் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பன் ஊராட்சி தரவைத்தோப்பு, தமிழ்நாடு அரசு நடுநிலைப்பள்ளியில் கழிப்பிட கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மாணவமாணவியர் நலம் கருதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், நடவடிக்கை எடுப்பாரா அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad