மானாமதுரையில் 'வைகை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின்' மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்த "வைகை கட்டிட பொறியாளர்கள் - மானாமதுரை" சங்கத்தின் மாதாந்திர சங்க கூட்டமானது சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் பொறியாளர் திரு சி. ராமமூர்த்தி, செயளாலர் (நிர்வாக) பொறியாளர் திரு ஆர். மேஜர் பிரேம்நாத் மற்றும் செயளாலர் (திட்டம்) பொறியாளர் ஆர். யுவராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர். இந்நிகழ்வில் முன்னாள் மண்டல பொறுப்பாளர் பொறியாளர் பாண்டி, வைகை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தை சேர்ந்த முன்னாள், இந்நாள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக