கள்ளர் பள்ளி விடுதியை சமூக நீதி விடுதி என அரசாணை வெளியிட்டமைக்கு, அச்சமுதாய மக்கள் மறுபரிசீலனை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

கள்ளர் பள்ளி விடுதியை சமூக நீதி விடுதி என அரசாணை வெளியிட்டமைக்கு, அச்சமுதாய மக்கள் மறுபரிசீலனை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்


கள்ளர் பள்ளி விடுதியை சமூக நீதி விடுதி என அரசாணை வெளியிட்டமைக்கு, அச்சமுதாய மக்கள் மறுபரிசீலனை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.



மதுரை மாவட்டம் சந்துப்பேட்டை பகுதியில் கள்ளர் கூட்டமைப்பு சார்பில் , 200க்கும் மேற்பட்டோர் சமூக நீதி விடுதி என்ற அரசாணையை மறுபரிசீலனை செய்து, கள்ளர் விடுதி என பெயர் மாற்றம் செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


         
தமிழக அரசு கள்ளர் பள்ளி விடுதியை, சமூக நீதி விடுதி என அரசாணை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்த கள்ளர் கூட்டமைப்பினர், தங்களுடைய சமுதாயத்தை மறைக்க செய்யும் வகையில் அரசாணை வெளியிட்டதாக கருதி, அரசாணையை மறுபரீசலனைச் செய்து மீண்டும் பழைய பெயருக்கு விடுதியை மாற்றம் செய்ய வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கோசமிட்டனர். தவறும் பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad