வேளாங்கன்னி-க்கு சிறப்பு பேருந்து சேவை - அமைச்சர் மனோ தங்கராஜ் நீரோடி-யில் துவக்கி வைக்கிறார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

வேளாங்கன்னி-க்கு சிறப்பு பேருந்து சேவை - அமைச்சர் மனோ தங்கராஜ் நீரோடி-யில் துவக்கி வைக்கிறார்.

வேளாங்கன்னி-க்கு சிறப்பு பேருந்து சேவை - அமைச்சர் மனோ தங்கராஜ் நீரோடி-யில் துவக்கி வைக்கிறார்!

ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று வேளாங்கன்னி தேவாலய திருத்தலத்தில் திருவிழா துவங்க இருப்பதையடுத்து, ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நீரோடி பகுதியில் புதிய பேருந்து சேவையை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். இப்பேருந்து நீரோடியில் துவங்கி மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, மஞ்சதோப்பு, நித்திரவிளை, சின்ன துறை, தூத்தூர், பூத்துறை, புதுக்கடை, தேங்காபட்டணம், முள்ளூர்துறை, இராமன்துறை, புத்தன்துறை, இனையம், ஹெலன் நகர், மேல்மிடாலம், மிடாலம், ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன்காலணி, குளச்சல், கொட்டில்பாடு, மணவாளக்குறிச்சி, கடியப்பட்டினம், முட்டம், பிள்ளைத்தோப்பு, அழிக்கால், கல்லுக்குட்டி, ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவில் சென்று அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மறுநாள் அதிகாலை வேளாங்கன்னி சென்றடையும்.

இப்பேருந்து சேவை வாராவாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நீரோடியில் இருந்து வேளாங்கன்னி நோக்கியும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீரோடி நோக்கியும் இயங்க இருக்கிறது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர். தமிழன் ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad