குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி.

குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி

குளச்சல் லியோன் நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்து உயிரிழந்தார். 

தாயார் டயானா குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad