திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற பொதுமக்கள் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதையடுத்து, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கே. கருணாநிதி அவர்கள் மனு அளித்திருந்தார்
அந்த மனுவின் பேரில் இன்று கரூர்–தாராபுரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று அமராவதி ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்
உயிரிழப்புகள் இனி நடைபெறாத வண்ணம், பொதக்குழி பகுதியில் தண்ணீர் செல்லாமல் மாற்றுப்பாதை மூலம் நீர் வர ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது பத்திரிகையாளர் சங்க செயலாளர் காஜா மைதீன், துணைத்தலைவர் தங்கவேல், செயற்குழு உறுப்பினர்கள் பீரதீப், ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக