கடலூர் – ஆகஸ்ட் 28, 2025 (ஆவணி 12)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாஸ் கண்டு நகரில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் டீக்கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. நேற்று முன்தினம் இறந்த ஒருவரின் சவ ஊர்வலம், நேற்று மாலை காடுக்கூடலூர் சாலையில் உள்ள திரு.வி.க. நகர் வழியாக காந்தி நகரில் உள்ள மின் தகன மேடைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது ராக்கெட் உள்ளிட்ட வெடிகள் வெடிக்கப்பட்டன. அதிலிருந்து பறந்த தீப்பொறிகள் அங்கிருந்த சாதிக்பாஷா என்பவரின் டீக்கடையில் விழுந்ததால் கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
இதே நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிளும் தீக்கிரையாயிற்று. தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக