போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஆகஸ்ட், 2025

போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி


போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி வாயிலாக, வருகின்ற 11.8.2025 அன்று போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி  ஏற்கும் நிகழ்வு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அதனைத்தொடர்ந்து, வருகின்ற 11.8.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸிங்) வாயிலாக போதைத்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.


அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்டவாறு நடைபெறவுள்ள விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காரைக்குடி, அழகப்பா பொறியியல் கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் போது, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் (நகராட்சிகள் / மாநகராட்சிகள்), சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் ஆகியோர், போதைத்தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மேற்கொண்டு, 


போதைப்பொருளை தடுக்கும் பொருட்டு  பொதுமக்கள் ஆகிய தாங்கள்,  தமிழக அரசு அறிவித்துள்ளவாறு அன்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தி, அனைவரும் ஒருங்கிணைந்து போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad