குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை
பேராவூரணி, ஆக.12- தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டார அளவில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், தடகளம் பெண்கள் பிரிவில், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 87 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பள்ளித் தலைமை ஆசிரியர் த.மேனகா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி எஸ்.மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகள், மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.நீலகண்டன், ஆர்.சினேகா ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பேராவூரணி நிருபர் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக