விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி (Tapentadol) மாத்திரைகளை சட்டவிரோத மாக போதைக்காக!
பயன்படுத்திய கும்பலை பிடித்தது தொடர்பாக!
வேலூர் , ஆகஸ்ட் 2 -
வேலூர் மாவட்டம் போதையில்லா மாவட் டமாக உருவாக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொ ண்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக பள்ளிகொண்டா மற்றும் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகளை
(Tapentadol) சட்ட விரோதமாக போதைக்கு பயன்படுத்துவதாக வேலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்A.மயில் வாக னன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அணைக்கட்டு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் மற்றும் வேலூர் மாவட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் பிரித்விராஜ் சௌகான் மற் றும் உதவி ஆய்வாளர் ராஜசேகர் அவர் கள் உடனடியாக விரிஞ்சிபுரம் மற்றும் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லை க்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற் கொண்டதில் வலி நிவாரணி மாத்திரை யான Tapentadol-ஐ போதைக்காக பயன் படுத்திய 18 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களிடமிருந்து 600 மாத்திரைகள், 50 ஊசிகள், 10 சோடி யம் குளோரைடு மருந்துகள் கைப்பற்றப் பட்டு வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடு படும் நபர்கள்மீது கடுமையான நடவடிக் கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப் படுவதோடு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் தங்கள் பிள்ளைகளின் செயல் பாடுகளை பெற்றோர்களும், ஆசிரியர்க ளும் விழிப்புடன் கண்காணிக்க வேண் டும் என வேலூர் மாவட்ட காவல்துறை யின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக