வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தரமான உணவு வழங்காமல் பல்வேறு முறைகேடுகள்!
வேலூர் , ஆகஸ்ட் 2
கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி,
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட் டப்பாளையம், வேலூர் மாநகராட்சி மண் டலம் 2, வார்டு எண் 29, 30, எட்டாம்மாள் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தரமற்ற உணவுப் பொட்டலங் கள் வழங்கப்படுகின்றனர்.வேலூர் மாந கராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொ குதி வாரியாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்முறை படுத்த சுமார்ரூ230கோடி க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட முகாம் அமைப்புகளை செயல் படுத்த ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இந்த அமைப்புகளை அமைப்பதற்கு ஒப்பந்ததாரரை நியமிக் கப்பட்டுள்ளனர். இதில் பணியாற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதில் வெரைட்டி கலர் ரைஸ் ரூபாய் 30 மற்றும் கண்டை னர் ஐந்து ரூபாய் ஆக மொத்தம் 35 ரூபாய் செலவில் ஆரோக்கியமற்ற கலர் சாதம் உணவு பொட்டலங்கள் கொடுக்கப் படுகிறது. இங்கு காலை முதல் மாலை வரை உட்கார்ந்த இடத்திலிருந்து பணி செய்யும் பணியாளர்களுக்கு தரமற்ற உணவுகளை தருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முறையாக கண்காணிக் காமல் அலட்சியம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து துறை தலைமை செயலர்களும், தலைமைச் செயலாளரும் மற்றும் தமிழக அரசும் இதனை முழுமையாக கண்காணிக்கப் பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் இந்த தரமற்ற ஆயில் உபயோகித்து தரமற்ற முறையில் கலர் வேரட்டி பிரைஸ் ரைஸ் கேஸ்ட்ரிக், வயிற்று வலி, பல்வேறு வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் என பல்வேறு உபாதைகள் உள்ளதாக, முறையாக முழுமையாக பணி செய்ய முடியாத ஒரு நிலையில் இருப்ப தாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக