நெமிலியில் உங்களுடன் ஸ்டாலின் முகா மில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார் பில் உதவி மையத்தில் இலவச ஜெராக்ஸ் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

நெமிலியில் உங்களுடன் ஸ்டாலின் முகா மில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார் பில் உதவி மையத்தில் இலவச ஜெராக்ஸ்

நெமிலியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உதவி மையத்தில் இலவச ஜெராக்ஸ் !
நெமிலி, ஆகஸ்ட் 02 -

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சம்பத்து ராயன்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடை பெற்றது.இதில் சிறுணமல்லி, நாகவேடு, மேலாந்துரை, கீழாந்துரை உள்ளிட்ட கிரா மங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
இந்த நிகழ்விற்கு அரக்கோணம் கோட்டா ட்சியர் வெங்கடேசன் தலைமை வகித் தார். நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். நெமிலி பிடிஓ சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த  முகாமிற்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் பெ வடிவேலு கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளிகள் அடை யாள் அட்டை, கூட்டுறவு வங்கி கடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் கோரிக்கை மனுக்களை அளித் தனர். இதனைத் தொடர்ந்து நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமை யில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உதவி மையம் அமைத்து பொது மக்க ளுக்கு வசதிக்கேற்ப மனுக்கள் பூர்த்தி செய்து, இலவசமாக ஜெராக்ஸ், குடிநீர், கூல்ட்ரிங்ஸ் மற்றும் மோர் உள்ளிட்டவற் றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC பெருமாள்,கிழக்கு ஒன்றிய பொருளாளர் புருஷோத்தமன், ஒன்றிய கவுன்சிலர் நாகவேடு முருகே சன், பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் வினோத், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad