அத்தி கிளை மருத்துவமனையும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்து வர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் மற்றும் டாக்டர் சௌ . சுகநாதன் ஆகி யோர்களின் அறிவுறுத்தலின்படி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது
குடியாத்தம் டி எஸ் பி எஸ் ஜி சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்து பொது மக்களுக்கு கண் ஆரோக்கியம் மற்றும் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்
சிறப்பு அழைப்பாளராக பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி எம் சுஜானி மற்றும் ஜி எம் மோகன் ஆகியோர் கலந்துக் கொண் டனர்.அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி அவர்கள் முன்னிலை வகித்தார். தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள் மற்றும் அத்தி மருத்துவமனையின் மருத்துவர் கள் இணைந்து கண் பரிசோதனை செய்து அதற்கான ஆலோசனையையும் பயிற்சியையும் வழங்கினர் .குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k .குமரவேல் மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை ஆகியோர் உடன் இருந்தார் கள். முகாமில் பொது மக்கள் சுமார் 96 பேர் கலந்துக்கொண்டு பயனடைந்தார் கள் . அத்தி மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சரவணன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக