சிவராம் கலைக்கூடம் மாணவன் ஹரி கிருஷ்ணா கின்னஸ் சாதனை முயற்சி 101 அறிஞர்களை வரைந்து சாதனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

சிவராம் கலைக்கூடம் மாணவன் ஹரி கிருஷ்ணா கின்னஸ் சாதனை முயற்சி 101 அறிஞர்களை வரைந்து சாதனை

சிவராம் கலைக்கூடம் மாணவன் ஹரி கிருஷ்ணா கின்னஸ் சாதனை முயற்சி 101 அறிஞர்களை வரைந்து சாதனை 

பாளையங்கோட்டை தியாகராஜ நகர் சிவகுமார் மற்றும் வினோதா சிவகுமார். மகன் ஹரிகிருஷ்ணா வயது 14
9 வகுப்பு புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் படித்து வருகிறார் சிறுவயதிலிருந்தே ஓவியக்கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். 

கடந்த 7 ஆண்டுகளாக அவர் சிவராம் கலைக்கூடத்தில், ஓவியம் பயின்று வருகிறார் ஆசிரியர்  மகாராஜனும், பயிற்சி ஆசிரியர் கணேசனும் வழிகாட்ட, ஓவியக் கலையில் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து வந்தார்

இப்போது, தனது முதல் சாதனையாக, இவர் 101 விஞ்ஞானிகளின் நிழல் ஓவியங்களை கரிக்கோல் (charcoal pencil shading) மூலம் 28 ன்ச் உயரமும் 22 இன்ச் சார்ட் போர்டு அகலமும் 
எட்டு மாத காலமாக வரைந்து திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் சிவராம் கலைக்கூடமும் இணைந்து ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நடைபெற்றது விஞ்ஞானி டாக்டர் ப்ரஃபுல்லா சந்திர ராய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விண்ணைத் தொட்ட விஞ்ஞானிகள் 101 என்ற தலைப்பில் கண்காட்சி
இந்த கண்காட்சி மாவட்ட அறிவியல் அதிகாரி முத்துக்குமார் தலைமையில் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தொடங்கி வைத்தார். 

இதில் மாவட்ட அறிவியல் மைய கல்வியாளர் லெனின் முன்னாள் மாவட்ட நூலகர் முத்துகிருஷ்ணன்
வெற்றிவேல் டுட்டோரியல் முருகவேல் ஓவிய ஆசிரியர் சிவராமகிருஷ்ணன், திருவனந்தம், கிருபா, கோவிந்தன்
ஹரி கிருஷ்ணா தங்கை 
கனிஷ்கா ஸ்ரீ 2020 கொரோனா நேரத்தில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் 150 வது காந்தி ஜெயந்தி முன்னிட்டு 150 சதுர அடியில் துணியால் துணியை கொண்டு ஓவியமாக வரைந்து சாதனை படைத்தவர் 
மேலும் இவர்களின் பெற்றோர்களும் ஓவியம் வரைவது திறமை மிக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் மாடசாமி - நெல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad