பெருமகளூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

பெருமகளூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்


பெருமகளூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெருமகளூர் பேரூராட்சி தனியார் திருமண மண்டபத்தில், "உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்"  நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். 


இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்  டி.பழனிவேல், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர்  வை.ரவிச்சந்திரன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், பெருமகளூர் நகரச் செயலாளர் மாரிமுத்து, பேரூராட்சி தலைவர் சுந்தரத்தமிழ், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் கவிதா, வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம், மா.சிதம்பரம், கே.ஆர்.புரம் சீனிவாசன், பூமிநாதன், முத்துவேல், வர்த்தக சங்கத் தலைவர் கே.கருப்பையா உள்ளிட்ட கிராமப் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) முத்துக்கண்ணு வரவேற்றார். நிறைவாக, பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். 


இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான நூற்றுக்கணக்கான மனுக்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினர். அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் பங்கேற்ற, மருத்துவ முகாம் நடைபெற்றது.


பேராவூரணி நிருபர் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad