கோத்தகிரி. ஜக்கனாரை பகுதியில் காட்டு பன்றி தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

கோத்தகிரி. ஜக்கனாரை பகுதியில் காட்டு பன்றி தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!


கோத்தகிரி. ஜக்கனாரை பகுதியில் காட்டு பன்றி தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜக்கனாரை பகுதிகளில் நேற்று இரவு நிகழ்ந்த பரிதாபமான வனவிலங்கு தாக்குதல் சம்பவம்ஒரு பெண்மணியின் உயிரிழப்புக்கே வழிவகுத்து,


நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில்  கோத்தகிரி  ஜக்கனாரை வாட்டர்பால்ஸ் நகர் என்ற இடத்தில் வசிக்கும் கண்ணன் என்பவரது மனைவி திருமதி.செல்லம்மாள் (வயது சுமார் 70) என்பவர், ஊருக்கு அருகில் உள்ள ஒத்தையடிப் பாதையில் நடந்து வரும்போது, காட்டுப்பன்றி தாக்கியதில், அவரது இடது தொடையில் பலத்த காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவர்கள் பரிசோதித்ததில், மேற்படி பெண் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 


காட்டுப்பன்றி தாக்கி நேற்று உயிரிழந்த செல்லம்மாளின் பிரேதம், இன்று(02.08.25) கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.  


 வனவிலங்கு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதால், இறந்த செல்லம்மாளின் கணவர் திரு.கண்ணன் என்பவருக்கு, வனத்துறை சார்பிலான உடனடி நிவாரணத் தொகை ₹.50,000/- க்கான காசோலையை, நீலகிரி மாவட்ட வன அலுவலர் அவர்களது உத்தரவின் பேரில்,  கோத்தகிரி வனச்சரக அலுவலர் தலைமையிலான வனக்குழுவினர் உடனிருக்க, உதவி வனப்பாதுகாவலர் அவர்களால் வழங்கப்பட்டது. 


      உடற்கூறாய்வுக்கு பிறகு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் இருந்து, பிரதம் இறுதி சடங்குகளுக்காக அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad