சவுதிஅரேபியா ஜிஷானில் நேற்று நடந்த சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் பலி, இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
இறந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் பனியடிமை(43), அந்தோணி தசம்(49) மற்றும் கேரளா கடலுண்டியைச் சேர்ந்த ரமேஷன் எருஷப்பன்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
ஜார்ஜ் மற்றும் அந்தோணி ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய விசாவில் நாட்டிலிருந்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது
அல்-சாகீர் தீவில் இருந்து மீன்பிடித்துவிட்டு தங்கள் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது
இவர்கள் சென்ற பிக்அப் வாகனம் டயர் பஞ்சராகி சாலையின் ஒரு பக்கத்தில் கவிழ்ந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக