ராணிப்பேட்டை அருகில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

ராணிப்பேட்டை அருகில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது!

ராணிப்பேட்டை அருகில்  இளம்  பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது!

ராணிப்பேட்டை , செப் 9 -

ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பாலாற்றங்கரை அருகே அரசுக்கு சொந் தமான தென்னந் தோப்பு உள்ளது. இப் பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவு என்ப தால், இரவு நேரங்களில் இளைஞர்கள் கூடி மது அருந்துவதும், பின்னர் அந்த வழியாக வருபவர்களிடம் சண்டையிடு வதையும் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு (ஞாயிற்றுக்கிழமை) இளம் பெண்  ஆண் நண்பருடன்  அந்த பகுதி யில் தனிமையில் அமர்ந்து  பேசிக்
 கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக மது போதையில் வந்த  இளைஞர்கள் 3 பேர் கொண்ட கும்பலின் பார்வை அவர்கள் மீது விழுந்துள்ளது. பின்னர், அந்த கும் பல் இவர்களிடம் வந்து இளம் பெண்ணி டம் தகாத வார்த்தையில் பேசியுள்ளது.
அதனை தட்டிக் கேட்ட இளம்பெண்ணின் காதலனை தாக்கிய அந்த கும்பல், இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிரு ந்து தூக்கி சென்று கூட்டு பாலியல் வன் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மூவரும் அங்கிருந்து தப்பியோடி யதாகக் கூறப்படுகிறது.பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பெண் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று, இச்சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர், பெற்றோருடன் சென்று சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார், வழக் கை உடனடியாக ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். இதை யடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் விசாரணை க்காக தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர், சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர் கள் ராணிப்பேட்டை அருகே உள்ள அவ ரைக்கரை பகுதியை சேர்ந்த சகோதரர் களான பார்த்திபன், சிவராஜ் மற்றும் அவர்களது நண்பர் ராஜா என தெரிய வந்தது. பின்னர், மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மூவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad