திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்


திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் தினசரி சுமார் 700 டன் முதல் 800 டன் வரை சேரும் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் பாறை குழியில் கொட்டப்பட்டு வருகின்றது இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரத் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில்

 முதலிபாளையம் பகுதியில் குப்பையை பாறை குழியில் கொட்டுவதை கண்டித்தும் திடக்கழிவு மேலாண்மையை 60 வார்டுகளிலும் செயல்படுத்தி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து எடுக்கவும் வலியுறுத்தியும் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்த கோரியும் மேலும் இந்த சுகாதார சீர்கேடு உருவாக்கும் குப்பை பிரச்சனையில் கண்டிக்கும் பொது மக்களை காவல்துறையை வைத்து அடக்கு முறையை ஏவி விடுவதாகவும் இதை கண்டிப்பதாகவும் பொதுமக்கள் நலன் காக்க உடனடியாக திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பி பிறகு பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுவாக கொடுத்தனர்


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad