திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமானது மாநகர பகுதிகளில் முழுக்க சேகரிக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை செய்யாமல் பாறை குழிகளில் கொட்டுகிறது இதனால் காற்று மாசு நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு மக்களுக்கு நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள் இதற்காக போராடிய இச்சிப்பட்டி விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்தும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திருப்பூர் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் மேலும் இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மண்டல செயலாளர்கள்
தொகுதி மாவட்ட மாநகர ஒன்றிய அனைத்து பாசறை நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருப்பூர் மாநகராட்சி கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுf

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக