தமிழக அரசு சார்பில் நடைபெற்ற 2025 - 26 ஆம் கல்வி ஆண்டிற்கான ஈரோடு வருவாய் மாவட்ட அளவில் நீச்சல் போட்டிகள் ஈரோடு குபேரலட்சுமி நீச்சல் குளத்தில் நடைபெற்றது. ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்று 37 தங்க பதக்கங்களும் முதலிடம் பெற்றனர். இரண்டாம் இடம் 24 வெள்ளி பதக்கங்களும், மூன்றாம் இடம் 11 வெண்கல பதக்கங்களையும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மேலும் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 24 பேர் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்தி பயிற்சி அளித்து வெற்றியடைய செய்த உடற்கல்வி ஆசிரியர்கள் அசோகன் மற்றும் சதீஷ்ராயன் ஆகியோருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சோ.தாட்சாயினி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்..
தமிழ் குரல் செய்தியாளர்
புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக