காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர் களுக்கும் அடையாள அட்டை வழங்கும் விழா!
காட்பாடி ,செப் 9 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண் கள் மேலநிலைப்பள்ளியில் பயிலும் 1050 மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் மற்றும் வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப் பினர் கே.அன்பு தனது சொந்த செலவில் ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பீட்டீல் அடை யாள அட்டை இன்று பள்ளியில் வழங்கி னார்.பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்திற்கு தலைவர் கே.அன்பு தலைமை தாங்கினார்.இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரி யை எஸ்.தாரகஸ்வரி தலைமைதாங் கினார். ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், உதவித் தலைமையாசிரியர்கள் க.ரமேஷ், டி.லலிதா, எல்.கௌரி, ஆசிரியர்கள் ஜி.டி.பாபு, என்.ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் பயிலும் 1050மாணவர்களுக்கு கழுத்து பட்டையுடன் கூடிய அடையாள அட்டையினை பள்ளி பெற்றோர் ஆசிரி யர் கழகத்தின் தலைவரும் வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் கே.அன்பு வழங்கினார். மேலும் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் கல்வி பயின்று சிறப்பிடம் பெற்ற 4 மாணவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் மற்றும் 3ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக