ஈரோடு கண்ணொளி தருவோம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற 40 ஆவது இந்திய கண்தான வார விழா மிகவும் சிறப்பாக ஈரோடு பழையபாளையம் ரோட்டரி சிடி ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதிப்புக்குரிய டாக்டர் ஆர்.சிவக்குமார் ஐபிஎஸ் காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்நாடு சிலை கடத்தல் துறை தடுப்பு பிரிவு அவர்களும், அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி.கிருத்திகா சிவகுமார் அவர்களும், லோட்டஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஈரோடு ரோட்டரி சென்ட்ரல் சங்கத்தின் பட்டய தலைவர் மருத்துவர் சகாதேவன் அவர்களும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கியின் நிறுவனர் மருத்துவர் வி.பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் ஜேசிஐ முன்னாள் தேசிய தலைவர் மதிப்புக்குரிய பாலவேலாயுதம் அவர்களும் ஈரோடு ரோட்டரி சென்ட்ரல் சங்கத்தின் தலைவர் மதிப்புக்குரிய சிவப்பிரகாஷ் அவர்களும் மற்றும் ஜே.சி.ஐ அலுமினியம் சங்கத்தை சேர்ந்த சங்க நிர்வாகிகளும் மற்றும் ரோட்டரி சென்ட்ரல் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை நிர்வாகிகளும் & ஜேசிஐ கேலக்ஸியை சேர்ந்த சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கண்தானம் செய்த குடும்பத்தாரை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் கண் தானம் பெற்று கண்பார்வை மீண்டும் கிடைக்கப்பெற்ற நபர்களும் கலந்து கொண்டு கண்தானம் பற்றி எடுத்துரைத்தார்கள்.
கண்ணொளி தருவோம் அறக்கட்டளை ஆரம்பித்து 100 நாட்களுக்குள் 41 ஜோடி கண்களை இயற்கையாக இறந்தவர்களின் உறவினர்கள் அனுமதி உடன் கண்தானம் பெறப்பட்டது.
கண் தானம் செய்தவர்களின் சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு அறக்கட்டளை சார்பாக 37 நபர்களுக்கு உடல் அடக்கத்திற்கான செலவு ரூபாய் 3500/- ஒவ்வொருவருக்கும் ஈரோடு ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை மற்றும் பாசூர் சங்கமம் அறக்கட்டளைக்கு செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்ணொளி தருவோம் அறக்கட்டளை தலைவர் ஆர்.வித்யாசாகர், செயலாளர் திரு.கஸ்தூரி ராமன், செயலாளர் சேவை திரு.ஷாஜகான் அவர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்...
தமிழக குரல் செய்தியாளர்
புன்னகை தூரன் இரா.சங்கர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக