திருப்பத்தூர் நகர காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு முதலமைச்சர் கேடயம் வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

திருப்பத்தூர் நகர காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு முதலமைச்சர் கேடயம் வழங்கல்!

திருப்பத்தூர் நகர காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு  முதலமைச்சர் கேடயம் வழங்கல்!
வாணியம்பாடி,செப்.9- 

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு அதற் கான முதலமைச்சர் கேடயத்தை காவல் துறை இயக்குனர் வழங்கினார்.தமிழ கத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இருந்து பல்வேறு நடைமுறைக ளில் சிறப்பாக செயல்பட்ட  சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத் தில் இருந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் அதற்கான முதலமைச்சர் கேடயத் தை கடந்த 06.09.2025 சென்னையில் உள்ள  தலைமை இயக்குனர் அலுவலகத் தில் தமிழக காவல்துறை இயக்குனர் வெங்கட்ராமன் திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர் களுக்கு கேடயம் பரிசாக வழங்கி பாரா ட்டினார். இதற்காக சிறப்பாக பணியாற் றிய திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா, திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சியாமளா தேவி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad