நாசரேத் ரயில் நிலையத்தில் துர்நாற்றம் வீசும் குப்பை தொட்டி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 செப்டம்பர், 2025

நாசரேத் ரயில் நிலையத்தில் துர்நாற்றம் வீசும் குப்பை தொட்டி.

நாசரேத் ரயில் நிலையத்தில் பயணிகள் இருக்கையுடன் சேர்த்து கட்டி வைத்துள்ள துர்நாற்றம் வீசும் குப்பை தொட்டி.

நாசரேத் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி காலை 7.40 மணிக்கு செல்லும் ரயிலில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் செல்கின்றனர்.

இந்த ரயிலில் பயணம் செய்ய நாசரேத் மட்டுமல்லாது அதன் சுற்று வட்டார மக்கள் 15 முதல் 30 நிமிடம் முன்னதாக வந்து காத்து இருக்கின்றனர்.

ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் இருக்கைகளை அமைத்து உள்ளது. அந்த இருக்கைகளில் துர்நாற்றம் வீசும் குப்பை தொட்டி கட்டி வைத்து இருப்பதால் அதில் மக்கள் அமர்ந்து இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad