திருநெல்வேலி மகாராஜா நகரில் அமைந்துள்ள ஜெயேந்திரா பள்ளி குழுமங்களின் தாளாளர் ஜெயந்தி ஜெயேந்திரன், 1990 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 35 வருடங்களாக ஆசிரியர் பணியில் ஆற்றிவரும் மெச்சத்தகுந்த சேவைக்காக தமிழக அரசின் "நல்லாசிரியர் விருது" பெற்றுள்ளார். இந்த விருது குறித்து திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பள்ளியின் தாளாளர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் அவரது கணவர் ஜெயேந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நீண்ட உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்:
ஜெயந்தி ஜெயேந்திரன் பேசுகையில், "இந்த விருது ஒரு நீண்ட உழைப்பிற்கு கிடைத்த சந்தோஷமான தருணம். இதை நாங்கள் பள்ளிக்குக் கிடைத்த பாராட்டு என்று கருதி மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
1990 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த அவர், அன்றைய தேதியிலேயே UGC தகுதியுடன் (M.Phil) இருந்தாலும், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டு முதல் பள்ளியின் பிரின்சிபலாகப் பணியாற்றி வருகிறார்.
ஆசிரியர், பிரைமரி கோ-ஆர்டினேட்டர், மிடில் கிளாஸ் இன்சார்ஜ், வைஸ் பிரின்சிபல் எனப் படிப்படியாகப் பொறுப்பேற்று இன்று பிரின்சிபாலாக உயர்ந்திருப்பது ஒரு மனநிறைவான அனுபவம் என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக