வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 400 கிலோ
குட்கா பொருட்கள் பறிமுதல் !
வேலூர், செப் 6 -
வேலூர் மாவட்டம் சட்டவிரோதமாக போ தைப்பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.மயில்வாகனன் உத் தரவின் பேரில் போதைப்பொருட்கள் விற் பவர்கள் மற்றம் கடத்துவர்களை பிடிக்க, கடந்த 2 மாதங்களாக மாவட்டம்முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 06. 09.2025-ம் தேதி கிடைத்த இரகசிய தகவ லின் அடிப்படையில், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில், உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான போலிசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் Innova car ஐ மடக்கி சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக கா ரில் கடத்தி வரப்பட்ட சுமார் 400 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி, ராஜஸ் தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கர் பவா ட்டி, என்பவரது மகன் விக்ரம் பவாட்டி (வயது30) ராஜஸ்தான் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, காட் பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனு ப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற
குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என வேலூர் மாவட்ட காவல்துறை யின் சார்பாக எச்சரிக்கப்படுவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக