பொது வழியை சுத்தம் செய்வது தொடர் பாக ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகி யை தாக்கிய குடும்பத்தி னரால் பரபரப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 செப்டம்பர், 2025

பொது வழியை சுத்தம் செய்வது தொடர் பாக ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகி யை தாக்கிய குடும்பத்தி னரால் பரபரப்பு!

 பொது வழியை சுத்தம் செய்வது தொடர் பாக ஏற்பட்ட தகராறில்  திமுக நிர்வாகி யை தாக்கிய குடும்பத்தி னரால் பரபரப்பு!
கந்திலி , செப் 6 -

திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடு த்த கந்திலி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய இலக்கிய அமைப்பாளர் மூர்த்தி (வயது 39) என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 12 அடி பொதுவழி சாலையை சுத் தம் செய்துள்ளார். அப்போது அதே பகுதி யை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 27), அவருடைய தம்பி யுவராஜ் (வயது 23), அக்கா நந்தகுமாரி(வயது 35), அம்மா ஷுலா (வயது 50) ஆகிய நான்கு பேரும் பொதுவழியை ஏன் சுத்தம் செய்கிறாய் எனக்கேட்டு மூர்த்தியிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கைகலப் பாக மாறியதால் ஒரே குடும்பத்தை சேர் ந்த கோவிந்தராஜ்,யுவராஜ் ,நந்தகுமாரி, ஷீலா ஆகிய நான்கு பேரும் மூர்த்தியை சரமாரியாக கட்டையால் தாக்கியுள்ளனர்
அதன் பின் படுகாயம் அடைந்த மூர்த்தி யை அங்கிருந்த பொதுமக்கள்  மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு வந்து அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் தாலுக்கா செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad