லாட்டரி சீட்டு விற்பனை செய்த வியாபாரிக்கு உடந்தை
இன்ஸ்பெக்டர் உட் பட 6 போலீசார் பணியிடை நீக்கம்
டிஐஜி நடவடிக்கை
கடலூர் செப் 05
லாட்டரி சீட்டு விற்பனை செய்த வியாபாரிக்கு உடந்தையாக செயல் பட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட
6 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து வடக்கு மண்டல ஐஜி நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவிட்டார்
இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நசீர் வயது 53 இவர் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி . இவரது சிதம்பரம் பகுதி யில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு போலீஸ் உயர் அதிகாரி மற்றும் போலீசார், அவருக்கு ஆதரவாகவும்
உடந்தையாகவும் செயல்பட்டனர்.
இது குறித்து வடக்கு மண்டல ஐஜி, அஷ்ரா கார்க் உத்தரவின் பேரில், மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் , தனிப்படை அமைத்து நசீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் மற்றும் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் களுக்கு லாட்டரி வியாபாரி மாமுல் வழங்கியதாகவும் தெரியவந்தது.
அதன்படி லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ,சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், காவலர்கள் கணேசன், கோபால கிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்திக் ஆகிய 7 பேரை, நேற்று முன்தினம் உடனடியாக வேலூர் மாவட்டத்துக்கு மாற்றி, வடக்கு மண்டல ஐஜி அஜித் அசோக் உத்தரவிட்டார் தொடர்ந்து நடந்த விசாரணையில், டிஎஸ்பி தவிர நேற்று இரவு சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு
சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்நடராஜன், காவலர்கள் கணேசன் கோபால கிருஷ்ணன் தனிப்பிரிவு காவலர் கார்த்திக் ஆகிய 6 பேரும்
சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
இவ்வாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு கடலூர் மாவட்ட செய்தியாளர்
P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக