75 வயது முதியவர் நெஞ்சுவலி காரண மாக உயிரிழப்பு அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சி யிடம் மனு!
வேலூர் , செப் 15 -
வேலூர் மாவட்டம் 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அரை மணி நேரத்துக்கு மேலாக வராததால் காரில் கொண்டு சென்ற முதியவர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழப்பு. இது குறித்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய பொது மக்கள் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, கீழ்அரசம்பட்டு பகுதியை சேர்ந்த பெரியசாமி (75 வயது) இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை கீழ் அரசம்பட்டு பகுதியிலிருந்து அடுக்கும் பாறையில் உள்ள அரசு மருத்துவமனை யில் அனுமதித்திருந்த தனது மருமகனை காண இருசக்கர வாகனத்தில் வந்துள் ளார் அப்போது நெல்வாய் அருகே வந்து கொண்டிருந்தபோது பெரியசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. பின்பு அங்கிருந்த தனியார் சிறிய மருத்துவ மனையில் அழைத்து சென்று பார்த்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ள னர்.
அதன் பின் அங்கிருந்த பொதுமக் கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவி த்துள்ளனர்ஆம்புலன்ஸ் வேலூரில் உள்ள சத்துவாச்சாரி பகுதியிலிருந்து நெல் வாய் வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து இருப்பதால் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் அந்த வழியாக வந்த காரில் ஏற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர் அரசு மருத்து வமனையில் அனுமதித்து சிறிது நேரத்தி லேயே விவசாயி பெரியசாமி என்பவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக 15.09.2025 திங்கட்கிழமை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கணியம் பாடி, கீழ்அரசம்பட்டு, சாத்துமதுரை, சித்தேரி, பாகாயம், ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் நடைபெற்றால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஆம்பு லன்ஸ் வருவதற்கும், ஆம்புலன்ஸ் வரு வதற்குள் உடல்நிலை மிகவும் மோசமான நிலை ஏற்படுகிறது. இதனால் அந்தப் பகுதியிலேயே ஆம்புலன்ஸை நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக