10ம் நாளான இன்று தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி.
திருச்செந்தூர் அமலி நகரில் அமலி அன்னை திருத்தலம் உள்ளது. இன்று திருத்தலத்தில் 85 ஆவது ஆண்டு திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்று வந்தது. பத்தாம் நாளான இன்று காலை மண்ணின் மைந்தர்கள் அருட்பணி ஜெயக்குமார், ஜெயகர், ஜனார்த்தனன், ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து காலை 7:15 மணிக்கு பெருவிழா திருப்பலி புது நன்மை நடைபெற்றது. தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ், தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அருட்தந்தையர் பிரதீப் ,பிராங்கிளின் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
மதியம் 12 மணிக்கு ஆலந்தலை திருப்பயணிகளின் திருப்பலியை பங்கு தந்தை சில்வஸ்டர் தலைமையில் நடந்தது. மாலை 4 மணிக்கு ஜீவா நகர் பங்கு தந்தை இருதயராஜ் திருப்பலி நடத்தினார்.
மாலை 7.00 மணிக்கு மேல் ஜெபமாலை நற்கருணை ஆசீர் மற்றும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் மற்றும் ஊர் நல கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக